126
இலங்கை குண்டுவெடிப்புக்களின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் மொஹமட் சஹரானின் இளைய சகோதரியின் வீட்டில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையில் 20 இலட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
சஹரானின் இளைய சகோதரியான 25 வயதுடைய மொஹமட் காதின் மதனியா என்பவரின் புதிய காத்தான்குடி-3 இல் அமைந்துள்ள வீட்டிலேயே இந்த சோதனை இடம்பெற்றுள்ளது.
இந்த சோதனை நடவடிக்கையில் 20 இலட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதம காவற்துறை அதிகாரி எம்.எம்.பி.தீகவதுர தெரிவித்துள்ளார். #SahranSister #MohammadKathinMadaniya ##eastersundayattacklk
Spread the love