கற்பிட்டி, மண்டலகுடாவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 31 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற இந்த சோதனை நடவடிக்கையில், கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதுடன், 25 – 70 வயதுக்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 03 மோட்டார் சைக்கிள்கள், கார் ஒன்று மற்றும் 03 கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். #PUTTALAM #KATPITTY #arrested #eastersundayattackslk
கற்பிட்டி பிரதேசத்தில் 31 சந்தேகநபர்கள் கைது…
150
Spread the love