Home இலங்கைகொக்குவில் தலையாழி பகுதியில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்

கொக்குவில் தலையாழி பகுதியில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ். கொக்குவில் தலையாழி பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராணுவத்தினர், கடற்படையினர், காவல்துறையினர் , காவல்துறை விசேட அதிரடிப் படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இந்த சுற்றிவளைப்பில் குறித்த பகுதிக்குள் உள்நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டதோடு, குடியிருப்பாளர்கள்எவரும் வெளிச்செல்லவோ அல்லது வீட்டை விட்டு வீதியில் இறங்கவோ இராணுவத்தினரால் அனுமதிக்கப்படவில்லை.

ஒவ்வொரு வீடு வீடாக நுழைந்து வீட்டில் இருப்பவர்கள் தொடர்பில் பதிவுகள் இடம்பெற்றதோடு வீடுகளும் காவல்துறையினரால் சோதனைசெய்யப்பட்டது. அவ்வாறு சோதனைக்குட்படுத்தபட்ட வீடுகள் இராணுவத்தினரால் சிறிய சுவரொட்டி ஒட்டப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 #kokuvil #roundup #army #navy #police #checking

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More