Home இலங்கைகற்பிட்டி பிரதேசத்தில் 31 சந்தேகநபர்கள் கைது…

கற்பிட்டி பிரதேசத்தில் 31 சந்தேகநபர்கள் கைது…

by admin


கற்பிட்டி, மண்டலகுடாவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 31 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.  நேற்று இடம்பெற்ற இந்த சோதனை நடவடிக்கையில், கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதுடன், 25 – 70 வயதுக்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 03 மோட்டார் சைக்கிள்கள், கார் ஒன்று மற்றும் 03 கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். #PUTTALAM #KATPITTY #arrested #eastersundayattackslk

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More