Home இந்தியா இமாசலப்பிரதேச பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து 5 பேர் பலி…

இமாசலப்பிரதேச பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து 5 பேர் பலி…

by admin

இமாசலப்பிரதேசத்தில் பள்ளத்தாக்கில் இன்று காலை ஜீப் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது மலைப்பாங்கான பகுதியில சென்று கொண்டிருந்த ஜீப் வண்டி திடீரென சாரதியின் கட்டுப்பாட்டினை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த ஜீப் வண்டியில் 10 பேர் பயணம் செய்த நிலையில் அவர்களுள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு வழங்கப்பட்டதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் படுகாயமடைந்த 5 பேரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More