153
600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் காவற்துறை அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகவும் இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை சீர்குலைக்கக் கூடிய கருத்துக்களையும் உள்ளடக்கிய 600 கடிதங்களுடன் 3 சந்தேகநபர்கள் நேற்று (02.05.19) கைது செய்யப்பட்டனர். கோட்டை காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் கடிதங்களை பரிமாறும் பிரிவில் நேற்று பிற்பகல் இவர்கள் கைது செய்யப்பட்டனர். #arrest #Eastersundayattackslk #cid
Spread the love