Home இலங்கைசஹ்ரானின் சகோதரன் ரிழ்வானின் வீட்டில் தற்கொலை அங்கி மீட்பு மாமாவும், மாமியும் கைது…

சஹ்ரானின் சகோதரன் ரிழ்வானின் வீட்டில் தற்கொலை அங்கி மீட்பு மாமாவும், மாமியும் கைது…

by admin


தற்கொலை செய்துகொண்ட, தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்பின் தலைவரென கூறப்படும், சஹ்ரான் ஹாஷிமின் சகோதரனான ரிழ்வானின் இல்லத்திலிருந்து தற்கொலை அங்கி உட்பட பெருமளவு வெடிபொருள்கள், நேற்று (02.05.19) மாலை மீட்கப்பட்டுள்ளன. அத்துடன், ரிழ்வானின் மாமனார் மற்றம் மாமியார் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என காவற்துறையினர் தெரிவித்தனர்.

சகோதரரான ரிழ்வான், சாய்ந்தமருது தற்கொலை குண்டு வெடிப்பில் பலியாகி உள்ளார். இவருடன் ரிழ்வானின் மனைவியும் பலியாகி இருந்தார்.. அவர்களுடைய காத்தான்குடி வீட்டிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன.

தற்கொலை அங்கி, அலைபேசிகள்-4, ஏ.ரி.எம்.அட்டைகள், வங்கி புத்தகம், மரணமடைந்த ரிழ்வான் தம்பதிகளின் நான்கு குழந்தைகளின் 4 புகைப்படங்கள், ரிழ்வானின் தேசிய அடயாள அட்டை உட்பட பல பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

விசேட அதிரடிப் படையினரும் காவற்துறைனரும் இணைந்தே இந்த தேடுதலை மேற்கொண்டனர் என காத்தான்குடி காவல் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தெரிவத்தார்.

அவ்வீட்டிலிருந்த ரிழ்வானின் மாமனார் மற்றும் மாமியார் ஆகியோரும் கைது செய்யப்பட்டு காத்தான்குடி காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். Eastersundayattacklk # arrest #suicide #rilvan #kaththankudi #sainthamaruthu

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More