இலங்கை பிரதான செய்திகள்

லக்ஷ்மன் கிரியெல்லவை பதவி நீக்குமாறு கோரிக்கை

 
அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவை பதவி நீக்குமாறு, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையிலான கடிதங்களுடன் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் அலுவலக பணியாளர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதியின் முதுகில் கத்தியால் குத்துவார்கள் என தாம் நினைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள மகிந்த அமரவீர, லக்ஷ்மன் கிரியெல்லவை பதவி நீக்குவதற்கான யோசனையை பிரதமர் ஜனாதிபதியிடம் உடனடியாக முன்வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சரவையில் இவ்வாறான ஒருவரை வைத்திருக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

  #LakshmanKiriella  #mahinthaamaraweera

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap