இலங்கை பிரதான செய்திகள்

இலங்கையர்கள் அனைவரும் பொறுமையுடன் செயற்பட வேண்டும்


இலங்கையர்கள் அனைவரும் பொறுமையுடனும் புத்திசாலித்தனத்துடனும் செயற்பட வேண்டுமென, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.நேற்று நீர்கொழும்பு பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியன்மையை அடுத்து, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்;.

நீர்கொழும்பு பிரதேசத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்த நிலையில், இந்த நிலையைக் கட்டுபடுத்துமாறு தான் பொறுப்பானவர்களுக்கு அறிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே கடந்த சில நாள்களாக புத்திசாலித்தனத்துடனும் பொறுமையாகவும் செயற்பட்டதைப் போன்று இனிவரும் காலங்களிலும் கத்தோலிக்கர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் உட்பட ஏனைய தரப்பினரிடமும் மிகவும் பணிவுடன் வேண்டுகோள் விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் பொய்த் தகவல்கள், தூண்டுதலான கருத்துகள், மக்களைத் தூண்டிவிடும் சமூக வலைத்தளங்களுக்கு இடமளிக்க வேண்டாமென்றும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

#malcomranjith #negambo #socialmedia #srilankans

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap