இலங்கை பிரதான செய்திகள்

உதவி கல்விப் பணிப்பாளர் மொஹமட் அலியர் குறித்து விரிவான விசாரணை..

ஐ.எஸ் இயக்கத்துடனான தொடர்புகளை கொண்டிருந்த சந்தேகத்தின் பேரில் கைதான உதவி கல்விப் பணிப்பாளர் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும் காவற்துறை அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.  தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹசிமீன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தவரும், அவருடன் நிதியை கையாண்டவரும் என சந்தேகிக்கப்படும், மொஹமட் அலியர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

60 வயதான காத்தான்குடியைச் சேர்ந்த மொஹமட் அலியர் காத்தான்குடி காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், விரிவான விசாரணை இடம்பெறுவதாகவும் காவற்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். #isis #shahranhashim #eastersunday attackslk

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.