Home இலங்கைகைதான யாழ் பல்கலை மாணவர்கள், சிற்றுண்டி சாலை நடத்துனரரை விடுவிக்க இணக்கம்..

கைதான யாழ் பல்கலை மாணவர்கள், சிற்றுண்டி சாலை நடத்துனரரை விடுவிக்க இணக்கம்..

by admin


கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டி சாலை நடத்துனர் ஆகியோரை விடுவிக்க நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக  ஜனாதிபதி செயலாளர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இரமநாதனின்  ஏற்பாட்டில், ஜனாதிபதி செயலாளர் உதய ஆர் செனவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட ஆகியோருடன் இன்று (10.05.19) காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்த கலந்துரையாடலில், யாழ் மருத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி ரவிராஜ், சிரேஷ்ட மாணவ ஆலோசகர் கலாநிதி ஐங்கரன், மாணவ ஆலோசகர் கலாநிதி றாயுமேஸ் ,யாழ் பல்கலைகழக பீடங்களின் மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் ஆகியோர் மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி கலந்துரையாடலில் இணைந்திருந்தனர்.

ஜனாதிபதியினால், ஜனாதிபதி செயலாளரின் ஊடாக சட்டமா அதிபருக்கு வழங்கிய ஆலோசனைக்கு அமைய வருகின்ற திங்கட்கிழமை சட்டமா அதிபரின் அறிக்கை யாழ் மாவட்ட நீதிபதிக்கு வழங்கப்பட்டு மாணவர்களின் விடுதலை உறுதியாகி உள்ளது. #Jaffnauniversitystudent #arrested #eastersundayattackslk

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More