பூநகரி பிரதேச செயலகப் பிரிவில், மிகவும் பின்தங்கிய வேரவில் கிராமத்தில் அமைந்துள்ள வேரவில் இந்து மகாவித்தியாலயத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கிய குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண புலம்பெயர் தமிழர் ஒருவர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் –
பூநகரி பிரதேசத்தின் மேற்கு கரையோரத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமாக வேரவில் கிராமம் விளங்குகிறது. இந்த கிராமத்தின் அநேக மாணவர்கள் கல்வி கற்கும் வேரவில் இந்து மகாவித்தியாலயம் நீண்ட காலமாக குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டிருந்தது.
குறித்த பாடசாலையில் இரண்டு கிணறுகள் உள்ள போதிலும் கிணற்று நீர் குடிப்பதற்கோ அல்லது சமையல் செய்வதற்கோ உகந்ததாக இல்லை என்றும் இதன் காரணமாக பாடசாலை மாணவர்களும் விடுதிகளில் தங்கியிருந்து கடமையாற்றும் ஆசிரியர்களும் பெரும் நெருக்கடியினை எதிர்கொள்வதாகவும் பாடசாலை சமூகத்தினர் சார்பாக பாடசாலைக்கான நீர் விநியோகம் தொடர்பில் கோரிக்கை ஒன்று FEED அமைப்பிடம் முன்வைக்கப்பட்டது.
அத்தோடு, குறித்த பாடசாலைக்கு அருகில் 300 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து சுத்தமான நீரை பெற்றுக் கொள்ளலாம் என்று பாடசாலைக்கான நீர் விநியோகம் தொடர்பில் ஆலோசனையும் முன்வைக்கப்பட்டது. அதன்படி பாடசாலைக்கான நீர் விநியோக கட்டமைப்பை செயற்படுத்தும் செயல்திட்டத்திற்கான முழு செலவினையும் ஏற்றுக் கொள்ள லண்டனில் வதியும் ஈழத்தமிழரான பாஸ்கரன் பார்த்தீபன் முன்வந்துள்ளார்.
பாஸ்கரன் பார்த்தீபன் ‘தாய்’ குழுமத்தின் நிர்வாக இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரித்தானியாவில் நடைபெறவுள்ள FEED அமைப்பின் அறிமுக விழாவை இவருடைய ஊடக நிறுவனமான தாய் மீடியா நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
FEED அமைப்பு..