இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான நுவன் சொய்சா மற்றும் அவிஷ்க குணவர்தன ஆகியோருக்கு தடை விதிக்கப்படவுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் கிரிக்கெட் நிறுவனத்தின் ஒழுங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளது.
கடந்த வருடம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற .ருபதுக்கு இருபது லீக் கிரிக்கெட் போட்டிகளின் போது இருவரும் விதிமுறைகளை மீறியதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நுவன் சொய்சா மீது 4 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதுடன், அவிஷ்க குணவர்தனா மீது 2 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#NuwanZoysa #AvishkaGunawardene #ttwenty #icc