269
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி சேவை சந்தைத வர்த்தக சங்கத்தல் இருந்து பொருளாலர் உட்பட நால்வர் விலகியுள்ளதாக கடிதம் மூலம் தலைவருக்கு அறிவித்துள்ளனர்.
சங்கமானது யாப்பு விதிமுறைகளுக்கு மாறாக இரண்டு வருடங்களை கடந்து செயற்பட்டு வருகின்றமை, மற்றும் வர்த்தகர்களின் நலன்களுக்கு மாறாக இடம்பெறுகின்ற செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கின்றமை, குறிப்பாக நில வாடகை அதிகரித்தமையோடு வரும் காலத்தில் பிரதேச சபையினால் வரிகள் அதிகரிக்கப்படவுள்ளமை தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாது சந்தை விடயத்தில் பிரதேச சபையின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கி செயற்படுதல் போன்ற காரணங்களால் தாம் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் 150க்கு மேற்ப்பட்ட சந்தை வர்த்தகர்களின் சார்பாக குறித்த சங்கத்தில் தொடர்ந்தும் பதவி வகிப்பது இல்லை எனத் தெரிவித்து பதவி விலகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் சந்தை வர்த்தக சங்கத்தின் தலைவர் அ.யேசுராசாவிடம் தொடர்பு கொண்டு வினவிய போது சந்தைக்கான நிரந்தர கட்டடம் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கா இரண்டு வருடங்களை கடந்தும் புதிய நிர்வாகத் தெரிவுக்கு செல்லவில்லை என்றும் ஆனால் தயராக இருப்பதாகவும், அத்தோடு நில வாடகை அதிகரித்தல் தொடர்பில் வர்த்தகர்களால் தனக்கு முறைப்பாடு எதுவும் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்ட அவர் விலகல் கடிதம் தனக்கு இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
Spread the love