Home இந்தியாடெல்லியில் 1,818 கிலோ போதைப்பொருள் மீட்கப்பட்டமை குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது

டெல்லியில் 1,818 கிலோ போதைப்பொருள் மீட்கப்பட்டமை குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது

by admin


டெல்லியை அடுத்த நொய்டாவில் உள்ள வீடொன்றிலிருந்து அண்மையில் 1,818 கிலோ சியுடோபெட்ரின் போதைப்பொருள் மீட்கப்பட்டமை குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சில தகவல்களை நேற்று வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிக அளவில் சிக்கியிருக்கும் இந்த போதைப்பொருளினை தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு செல்ல இருந்த விமானத்தில் ஏறுவதற்காக டெல்லி விமான நிலையத்துக்கு வந்த அந்த நாட்டை சேர்ந்த 31 வயதான பெண்ணை சோதனையிட்ட போது அவரிடம் 24.7 கிலோ சியுடோபெட்ரின் போதைப்பொருள் இருந்தது.

அதை பறிமுதல் செய்ததுடன், அந்த பெண்ணையும் கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்திய போது அப்போது அந்த பெண்ணிடம் போதைப்பொருளை கொடுத்த நைஜீரியாவை சேர்ந்த இளைஞர் மற்றும் பெண் ஒருவர் குறித்த தகவல் கிடைத்ததனையடுத்து நொய்டாவில் அவர்கள் வசித்து வந்த வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனையிட்ட போதே மேற்படி 1,818 கிலோ போதைப்பொருள் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த 2 பேரையும் கைது செய்துள்ளனர் எனவும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 1000 கோடி ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Delhi #drugs

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More