Home இலங்கைகிளிநொச்சி வைத்தியசாலை பணிப்பாளர் திடீர் இடமாற்றம்

கிளிநொச்சி வைத்தியசாலை பணிப்பாளர் திடீர் இடமாற்றம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நிர்வாக மேம்படுத்தல் நடவடிக்கையின் ஒருபகுதியாக நாடளாவிய ரீதியில் மருத்துவ நிர்வாகத் துறையில் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் இம்மாத ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட 146 புதிய நியமனங்களை அடுத்து இரண்டாவது கட்டமாக இன்றையதினம் மேலும் 30 மருத்துவ நிர்வாகத் துறை நியமனங்கள் நாளையிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைகள் பணிப்பாளர் வைத்தியர் த.காண்டீபன் மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று மாற்றலாகிச் செல்கின்றார். இவர் கிளிநொச்சியில் கடமையாற்றிய குறுகிய காலப்பகுதியில் பல்வேறு அபிவிருத்திகளை வைத்தியசாலையில் மேற்கொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மேற்படி நியமனங்களுக்கு அமைவாக வவுனியா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் க.செந்துராபதிராஜா மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று செல்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#கிளிநொச்சிவைத்தியசாலை  #பணிப்பாளர் #இடமாற்றம்# kilinochchihospital #transfer

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More