Home பிரதான செய்திகள்உலக கிண்ணத்தினை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு

உலக கிண்ணத்தினை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு

by admin


உலக கிண்ணத்தினை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார்.

உலக கிண்ணப் போட்டிக்கான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் திரும்பி இருப்பது போட்டியில் அணியின் ஆட்ட திறனை அதிகரிப்பதாக அமையும் எனத் தெரிவித்த அவர் அவர்கள் இருவரும் அணிக்கு வெளியே இருந்த போது அவுஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
உலக கிண்ணத்தினை தக்க வைத்து கொள்ள அவுஸ்திரேலிய அணியினர் போராடி நிச்சயமாக எதிரணிகளுக்கு சவால் அளிப்பார்கள் எனத் தெரிவித்த ரிக்கி பொண்டிங் இங்கிலாந்து மண்ணில் வெற்றி பெற முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் உலக கிண்ணத்தினை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது எனவும் சமீபகாலமாக ஒரு நாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு வருவதுடன் சொந்த மண்ணில் விளையாடுவதனால் இயற்கையாகவே இங்கிலாந்து அணிக்கு சில அனுகூலங்கள் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அந்த அணிக்கு இந்தியா, அஸ்திரேலியா அணிகள் சவால் அளிக்கும் எனவும் மற்ற அணிகளும் அதிர்ச்சி அளிக்க வாய்ப்பு இருக்கிறது எனவும் ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார்

#RickyPonting #worldcup #england

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More