என்னை கண்டு எதிரணி பந்துவீச்சாளர்கள் இன்னும் நடுங்குகிறார்கள் என மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னனி வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். 5-வது முறையாக உலக கிண்ணப் போட்டியில் விளையாட உள்ள கிறிஸ் கெய்ல் நேர்காணல் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் தனது தலைக்கு குறி வைக்கிறார்கள் எனவும் அதனால் முந்தைய போட்டிகளை போன்று இந்த உலக கிண்ணம் தனக்கு எளிதாக இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கமராவின் முன் கேட்டால், கெய்லை கண்டு பயமே இல்லை என்பார்கள் , தனியாக கேட்டால், கெய்ல் எப்போதும் கெய்ல் தான் என்று சொல்வார்கள். இதை நான் ரசித்து மகிழ்கிறேன். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிரான போராட்டத்தை எப்போதும் உற்சாகமாக அனுபவித்து ஆடுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 39 வயதான கிறிஸ் கெய்ல் 39 சிக்சர் உள்பட 424 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#எதிரணி #பந்துவீச்சாளர்கள் #கிறிஸ்கெய்ல் #chrisgayle #worlcup