Home உலகம்தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியாக சிரில் ரமபோசா

தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியாக சிரில் ரமபோசா

by admin


தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியாக சிரில் ரமபோசாவை பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தெரிவு செய்துள்ளனர். அண்மையில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா குடியரசின் பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர்.

இந்நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதியாக சிரில் ரமபோசாவை பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மீண்டும் தேர்வு செய்துள்ளனர். ஜனாதிபதிப் பதவிக்கு சிரில் ரமபோசாவை தவிர வேறு யாரும் நிறுத்தப்படாத நிலையில் ஆளும்கட்சி உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் சிரில் ரமபோசா வெற்றிபெற்றதாக தேர்தலை மேற்பார்வையிட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மோகோயேங் அறிவித்துள்ளார்.

#தென்னாப்பிரிக்கா  #ஜனாதிபதி #சிரில்ரமபோசா #CyrilRamaphosa  #South Africa  #president

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More