Home இந்தியாசென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு

by admin

பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
17-வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் மாதம் 11ம் திகதி ஆரம்பமாகி கடந்த 19ம் தினதிவரை வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளுக்கும் தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது

இந்த பாராளுமன்றத் தேர்தலில் 8040 வேட்பாளர்கள் களமிறங்கிய நிலையில் சுமார் 90 கோடி வாக்காளர்கள் வாக்களித்திருந்தநிலையில் வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களான லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி ஆகிய இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, ஆயுதப்படை மற்றும் சென்னை மாநகர காவல்துறையினர் உள்ளிட்ட 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்துக்குள் வேட்பாளர்களின் முகவர்கள் கைத்தொலைபேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பென்சில், காகிதம் ஆகியவற்றை மட்டுமே உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

#சென்னை  #வாக்குஎண்ணும்மையங்களில் # பாதுகாப்பு # chennai #security

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More