பிரதான செய்திகள் விளையாட்டு

தென்னாபிரிக்காவுக்கெதிரான பயிற்சிப் போட்டியில் இலங்கை 87 ஓட்டங்களினால் தோல்வி

Cricket – ICC Cricket World Cup Warm-Up Match – Sri Lanka v South Africa – Cardiff Wales Stadium, Cardiff, Britain – May 24, 2019 South Africa players celebrate victory Action Images via Reuters/Andrew Boyers

தென்னாபிரிக்காவுக்திரான பயிற்சிப் போட்டியில் இலங்கை 87 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.
நேற்றையதினம் கார்டிப் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 338 ஓட்டங்களை எடுத்திருந்தனர்.

இதனையடுத்து 339 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 42.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 251 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 87 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.

12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், உலகக் கிண்ணத்துக்கான பயிற்சிப் போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில் எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள மற்றுமொரு பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#South Africa #Sri Lanka #icc  #தென்னாபிரிக்கா #இலங்கை #தோல்வி

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.