Home இலக்கியம்நடுகல் நாவலுக்கு கனடாவில் அறிமுக நிகழ்வு!

நடுகல் நாவலுக்கு கனடாவில் அறிமுக நிகழ்வு!

by admin

ஈழத்து இளம் எழுத்தாளர் தீபச்செல்வனின் நடுகல் நாவல் உலகின்  பல்வேறு நாடுகளில் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றது. அந்த வகையில் கனடா, டொரன்ரோவில் நடுகல் நாவல் அறிமுகம் எதிர்வரும் ஞாயிறு 26 ஆம் திகதி நடைபெறுகின்றது.

எழுத்தாளரும் ஊடகவியலாளருமான பொன்னைய்யா விவேகானந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் வரவேற்புரையை ஊடகவியலாளர் கந்தசாமி கங்கதரனும் தீபச்செல்வன் குறித்த அறிமுகத்தை இயக்குனர் ரஞ்சித் யோசப்பும் வழங்கவுள்ளனர்.

நூல் அறிமுகத்தினை எழுத்தாளர் ரதனும் வழங்கவுள்ளார். அத்துடன் நடுகல் பெறுமானம் என்ற தலைப்பில் காலம் இதழின் ஆசிரியர் செல்வம் ஆய்வு ஒன்றினை நிகழ்த்தவுள்ளார். மேலும் ஆய்வுரைகளை  ஈழக் கலைஞர் மேர்லின் மற்றும் அன்பு ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.

நூலினை ஈழத்துக் கவிஞர் சா.வே. பஞ்சாட்சரம் வெளியிட்டு வைக்க, கவிஞர் தீபச்செல்வனின் ஏற்புரையும் இடம்பெறவுள்ளது

#நடுகல் நாவல் #கனடா  #அறிமுக நிகழ்வு #தீபச்செல்வன் #ரஞ்சித் யோசப்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More