Home இலங்கைஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படவில்லை

இரணைதீவில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படவில்லை

by admin


கிளிநொச்சி இரணைதீவில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை வசதிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பூநகரிப்பிரதே செயலர் பிரிவின் கீழ் உள்ள இரணைதீவு பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் 26 வருடங்களின் பின்னர் கடந்த ஆண்டு மே மாதம் மீள்குடியேறினர்.

கடற்தொழிலை வாழ்வாதாரமாகக்கொண்டு மீள்குடியேறியுள்ள மக்கள் தமக்கு ஆரம்பத்தில் கொட்டில்களை அமைப்பதற்கு கிடுகுகள் மாத்திரமே வழங்கப்பட்டன. அவற்றை வைத்து தற்காலிக கொட்டகைகளை அமைத்ததாகவும் தற்போது இந்தக்கொட்டில்கள் சேதமடைந்;துள்ளன எனவும் தெரிவித்துள்ளனர்.

தமது சொந்த நிலத்தில் இருந்து இடம்பெயர்ந்து 26 வருடங்களின் பின்னர் மீள்;குடியேறிய தமக்கு இதுவரை தற்காலிக வீடுகளையோ அல்லது மலசலகூட வசதிகளையோ ஏற்படுத்தித்தரவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.ஆகவே தமக்கு தற்காலிக வீடுகளையேனும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு மேற்படி பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#கிளிநொச்சி #இரணைதீவு #மீள்குடியேறிய #அடிப்படை வசதிகள்  #iranaitheevu

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More