நடந்து முடிந்த 17ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளதுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாராளுளுமன்றக் குழுத் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்த நிலையில் மே 30ஆம் திகதியன்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் மோடி பிரதமராகப் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 30ஆம் திகதி குடியரசுத் தலைவர் மாளிகையில் மாலை 7 மணியளவில் பிரதமருக்கும், ஒன்றிய அமைச்சர்கள் குழுவின் உறுப்பினர்களுக்கும் குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்துவைப்பார் என குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ ருவிட்டர் பக்கத்தில், அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 353 உறுப்பினர்கள் உள்ள நிலையில் அதில் பாஜகவுக்கு மட்டும் 303 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
#நரேந்திர மோடி