Home பிரதான செய்திகள் 12ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

12ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

by admin


உலகக் கிண்ணக்கிரிக்கெட் தொடரானது இன்றையதினம் லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இன்றைய போட்டியானது தொடரை நடாத்தும் இங்கிலாந்து அணிக்கும்; தென்னாபிரிக்கா அணிக்குமிடையில் புpரித்தானிய நேரம் காலை 10.30க்கு ஆரம்பமாகவுள்ளது

அந்தவகையில், உலகக் கிண்ணத்தை இம்முறை கைப்பற்றக்கூடிய அதிக வாய்ப்புகளைக் கொண்ட அணியாக இங்கிலாந்து அணி காணப்படுவதாக தெரிவிக்கும் அதேவேளை அதற்கடுத்த அதிக வாய்ப்புகள் கொண்ட அணியாக இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை , தென்னாபிரிக்கா, நியூசிலாந்து அணிகளும் கிண்ணத்தைக் கைப்பற்றக்கூடிய ஓரளவு வாய்ப்புகளைக் கொண்ட அணிகளாகக் காணப்பகின்றது. அத்துடன் இங்கிலாந்துடனான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் போது சவால் விடுக்கக்கூடிய அணியாக மேற்கிந்தியத் தீவுகளும் உருவெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

# உலகக் கிண்ண #கிரிக்கெட் #இங்கிலாந்து  #தென்னாபிரிக்கா #worldcup

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More