Home இலங்கைசெல்வபுரம் ஏ9வீதிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி…

செல்வபுரம் ஏ9வீதிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி…

by admin

முல்லைத்தீவு மாங்குளம் காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிரதேசத்தை அண்மித்த செல்வபுரம் ஏ9வீதிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்றள்ளது. கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் தனியார் ஆடை தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்த வேளை, வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் பின்புறமாக மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்தப்பேருந்து தரிப்பிடமற்ற பகுதியில் சடுதியாக தரிக்க முற்பட்டபோது, அதிக வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில்  விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களுமே உயிரிழந்துள்ளனர்.  உயிரிழந்தவர்களின் சடலம் கிளிநாச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவற்துறையினர்  முன்னெடுத்த வருகின்றனர். #கிளிநொச்சி #மாங்குளம் #வவுனியா #முல்லைத்தீவு #விபத்து

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More