உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு முன் முன்னிலையாகுமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதிக் காவல்துறைமா அதிபர் நாலக்க டீ சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் அமைக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக் குழு கடந்த புதன்கிழமை விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையிலேயே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானை கைது செய்வதற்கு 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் திகதி பிறப்பித்த பிடியாணை மற்றும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பயங்கரவாத விசாரணை பிரிவின் பணிப்பாளராக அப்போது கடமையாற்றிய முன்னாள் பிரதிக் காவல்துறைமா அதிபர் நாலக்க டீ சில்வாவிடம் விளக்கம் கோருவதற்காகவே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
#நாலக்க டீ சில்வா #அழைப்பு #உயிர்த்த ஞாயிறு #சஹ்ரான்