147
யாழ்ப்பாணம் மாவட்ட படப்பிடிப்பு தொழில் சார்ந்த அனைவரையும் இணைத்து புதிய அமைப்பு ஒன்று உருவாக்கபட்டது. இந்த அமைப்பின் ஆரம்ப நிகழ்வு இன்று (2) காலை 9.30 மணிக்கு நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
படப்பிடிப்பாளர்களின் ஒன்று கூடலுடன் ஆரம்பமான நிகழ்வில் மூத்த படப்பிடிப்பு கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் முன்னிலையில் யாழ். மாவட்ட படப்பிடிப்பாளர் சங்கம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
#யாழ்ப்பாணம் #படப்பிடிப்பாளர் சங்கம் #ஆரம்பம்
படங்கள்: ஐ.சிவசாந்தன்
Spread the love