வழங்கிய காலக்கேடு முடிவடைய இன்னும் 40 நிமிடங்களே அரசாங்கத்திற்கு உள்ளது என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அமைச்சர் ரிஷாத், மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை உடன் பதவி நீக்கி குற்றப்புலனாய்வு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இல்லையெனில் கடும் எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே அவர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் மீண்டும் தற்போது அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #பொதுபலசேனா #ஹிஸ்புல்லாஹ் #ரிஷாத் #அசாத்சாலி #ஞானசாரதேரர்
வழங்கிய காலக்கேடு முடிவடைகிறது – ஞானசாரர் எச்சரிக்கை…
167
Spread the love