162
இலங்கையின் கொணகமுல்ல, தலஹகம அகுரெஸ்ஸ காவற்துறைப் பிரிவில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின்சார இணைப்பு ஒன்றில் சிக்கி இன்று (06) காலை 7.30 மணி அளவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் 45 வயதுடைய கமகே, 56 வயதுடைய அமர விக்ரமகே சந்ரதாச, 78 வயதுடைய மதரசிங்ககே டேவிட் ஆகிய மூவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அகுரெஸ்ஸ காவற்துறையினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். #மின்சாரஇணைப்பு
Spread the love