ஒவ்வொரு நாளும் 10 லட்சம் பேருக்கு புதிதாக பால்வினை நோய்த் தொற்று ஏற்படுகின்றது உலகில் ஒவ்வொரு நாளும் 10 லட்சம் பேருக்கு புதிதாக பால்வினை நோய்த் தொற்று ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோனோரியா, சிபிலிஸ், ச்லாமைதியா, ட்ரைகோமோனியாசிஸ் போன்ற பாலுறவு மூலம் பரவும் நோய்த் தொற்றுகளுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கையை குறைப்பதற்காக 2012ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என சுகாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஒருவகை கோனோரியா நோய் மருந்துகளுக்கும் கட்டுப்படுவதில்லை எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். #பால்வினைநோய்த்தொற்று #உலகசுகாதார நிறுவனம் #பாலுறவு