Home இலங்கைடைனமற் வெடிபொருள் வெடித்ததில், ஒருவர் கடுங்காயத்திற்கு உள்ளாகினார்…

டைனமற் வெடிபொருள் வெடித்ததில், ஒருவர் கடுங்காயத்திற்கு உள்ளாகினார்…

by admin

கடற்தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் டைனமற் வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குருநகர் பற்றிக் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு (வெள்ளி) 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். “அந்த வீட்டில் தனிமையில் வசித்து வருபவர் டைனமற் வெடிபொருளைத் தயாரிக்கும் போது அது வெடித்துள்ளது. சம்பவத்தில் அவர் படுகாயமடைந்தார்.

சம்பவத்தையடுத்து அயலவர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர். அத்துடன், காவற்தறையினருக்கும் தகவல் வழங்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என காவற்தறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். #Dynamiteexplosive #டைனமற்வெடிபொருள் #குருநகர்  #யாழ்ப்பாணம் #போதனாவைத்தியசாலை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More