Home இலங்கைமோடியின் பயணம், கொழும்பில் வாகனப் போக்குவரத்துகளுக்கு கட்டுப்பாடு…

மோடியின் பயணம், கொழும்பில் வாகனப் போக்குவரத்துகளுக்கு கட்டுப்பாடு…

by admin


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தையொட்டி கொழும்பு, அதனை அண்மித்த பிரதேசங்களின் போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுபடுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று காலை 11 மணியிலிருந்து 12 மணி வரையும் பகல் 1.45 மணியிலிருந்து 3.30 மணி வரையும் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையும் வீதிகள் சிலவற்றில் வாகனப் போக்குவரத்து மட்டுபடுத்தப்பட்டுள்ளதாக காவற்துறைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 11 மணியிலிருந்து பகல் 12 மணி வரை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க -கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை, பொரல்ல, தாமரைத் தடாகச் சுற்றுவட்டம் ஊடான காலி வீதி, ஜனாதிபதி மாவத்தை வரையும் பகல் 1.45 மணியிலிருந்து மாலை 3.30 மணி வரை ஜனாதிபதி மாவத்தையிலிருந்து தாமரைத் தடாகச் சுற்றுவட்டம், பொரல்லை ஊடாக கட்டுநாயக்க வரையான வாகனப் போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். #நரேந்திரமோடி #கொழும்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More