Home இலங்கைஆவா – தனுரொக் முரண்பாடு கொக்குவில் புகையிரத நிலைய அதிபர் மீது தாக்குதல்…

ஆவா – தனுரொக் முரண்பாடு கொக்குவில் புகையிரத நிலைய அதிபர் மீது தாக்குதல்…

by admin


கொக்குவில் புகையிரத நிலைய பொறுப்பதிகாரி (ஸ்ரேசன் மாஸ்டர்) மீது கும்பல் ஒன்று நேற்று புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொக்குவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள முச்சக்கர வண்டித் திருத்தகத்தில் பொறுப்பதிகாரி நின்ற வேளை . அங்கு மோட்டார் சைக்கிள்களில் சென்ற கும்பல், அவரைத் தாக்கியுள்ளது. தலையில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

ஆவா குழுவைச் சேர்ந்த சிலர் பொழுதைக் கழிப்பதற்காக கொக்குவில் புகையிரத நிலைய பகுதிக்கு செல்வதாகவும் , அவர்களுக்கு இடம் கொடுத்து நட்பு வைத்திருந்தமையாலேயே பொறுப்பதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தாக்கியவர்கள் தனுரொக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. #கொக்குவில்புகையிரத நிலையம் #யாழ்ப்பாணம்போதனாவைத்தியசாலை #ஆவாகுழு #தனுரொக்குழு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More