சென்னை முழுவதும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பராமரிப்பு தொடர்பாக மேற்கொண்ட கேள்விப்பத்திரங்களை மெட்ரோ வோட்டர் நிறுவனம் ரத்து செய்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் ஊழல் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்ற அறப்போர் இயக்கம்;, கடந்த பெப்ரவரி மாதம் இறுதி செய்யப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பராமரிப்பு தொடர்பாக 50 கோடி ரூபாய் பெறுமதியில் மேற்கொண்ட கேள்விப்பத்திரங்களில் ஊழல் நடந்திருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
கேள்விப்பத்திரங்களை கொடுக்க சென்னை மெட்ரோ வோட்டர் அலுவலகத்திற்கு வருபவர்களை குண்டர்களை வைத்து மிரட்டுவதுடன் ஊழல்கள் இடம்பெறுவதாகவும் தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தது. அத்துடன் இறுதி செய்யப்பட்ட 74 கேள்விப்பத்திரங்களையும் ரத்து செய்து இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் குறித்த கேள்விப்பத்திரங்களை ரத்து செய்துள்ளதாக சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவித்த மெட்ரோ வோட்டர் நிறுவனத்தின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர், புதிய கேள்விப்பத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்; எனத் தெரிவித்துள்ளார்
#சென்னை #கேள்விப்பத்திரங்களை #ரத்து #மெட்ரோ வோட்டர் நிறுவனம்