Home இந்தியா இந்திய விமானப்படை விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்

இந்திய விமானப்படை விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்

by admin

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான, ஏ.என்.32 ரக விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று கடந்த மூன்றாம் திகதி, 13 பேருடன் அசாமில் இருந்து புறப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்தது.

இந்த விமானத்தை தேடும் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், இதற்காக விமானங்கள் உட்பட உலங்கு வானூர்திகளும் பயன்படுத்தப்பட்டன. மோசமான வானிலை காரணமாக தேடுதல் பணியில் சிறிது தொய்வு ஏற்பட்ட போதும் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்றது.

இதனிடையே கடந்த திங்களன்று அருணாச்சல பிரதேசத்தின், சியாங் மாவட்டத்தில் உள்ள கட்டி என்ற கிராமம் அருகே விமானத்தின் பாகங்கள் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து விமானத்தின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு மீட்புக்குழுவினர் நேற்று காலை பயணித்ததுடன், குறித்த பகுதியை ஆய்வு செய்ததில் 13 பேரும் உயிரிழந்துள்ளதாக விமானப்படை உறுதி செய்துள்ளது

#இந்திய #விமானப்படை விமானத்தில் #உயிரிழந்துள்ளனர் #ஏ.என்.32

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More