Home உலகம் லிபியாவில் உள்நாட்டு மோதலில் 42 பேர் பலி…

லிபியாவில் உள்நாட்டு மோதலில் 42 பேர் பலி…

by admin

லிபியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் அந்நாட்டின் தலைநகர் திரிபோலியில் நடந்த இருதரப்பு மோதலில் 42 பேர் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது. லிபியாவில் ஆட்சியிலிருந்த கடாபி, 2011ம் ஆண்டு கொல்லப்பட்டதில் இருந்து உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளதுடன் பல்வேறு ஆயுதக் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

அரசு படையினர் வசமுள்ள தலைநகர் திரிபோலியை கைப்பற்றுவதற்காக கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த மோதலில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஊரைவிட்டு வெளியேறி உள்ளனர்.

இந்நிலையில், லிபியாவின் தலைநகர் திரிபோலியில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் 42 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் 125க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் எனவும் ஐநா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #லிபியா #உள்நாட்டுப்போர் #கடாபி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More