Home இந்தியாகோவையை தொடர்ந்து மதுரையிலும் ஐ.எஸ்சினைத் தேடி சோதனை

கோவையை தொடர்ந்து மதுரையிலும் ஐ.எஸ்சினைத் தேடி சோதனை

by admin


கோவையில் மேற்கொண்டது மதுரையிலும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினமன்று தேவாலங்கள் மற்றும் விடுதிகளை குறிவைத்து தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுடன் சமூக வலைதளங்களில் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் எழுந்ததையடுத்து கோவையில் 7 இடங்களில் சோதனை மேற்கொண்ட தேசிய புலனாய்வு அதிகாரிகள் 4 இளைஞர்களை கைது செய்திருந்தனர்.

இந்த நிலையில் கோவை போன்று மதுரையிலும் இன்று தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை வில்லாபுரம் உள்ளிட்ட 3 பகுதிகளில் கொச்சியில் இருந்து வந்த அதிகாரிகள் இவ்வாறு சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சோதனையில் வில்லாபுரம் சதகத்துல்லா என்பவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

#கோவை  #மதுரை #ஐ.எஸ்  #உயிர்த்த ஞாயிறு  #சோதனை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More