பிரதான செய்திகள் விளையாட்டு

இலங்கை அணி மீது எவ்வித தடைகளோ கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லை

இலங்கை அணி மீது எவ்வித தடைகளோ கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லையென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் உலகக் கிண்ணத் தொடரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளாது தனது ஊடகக் கடமைகளை புறக்கணித்த இலங்கை அணி தடையை எதிர்கொள்ளும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற குறித்த போட்டியில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவிடம் 87 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்ததனையடுத்து தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பினை புறக்கணித்திருந்தது.ஐ.சி.சி.யின் விதிமுறைப்படி போட்டி முடிந்த பின் வெற்றி பெற்ற அணியும் தேல்வியடைந்த அணியும் ஊடகங்களைச் சந்தித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளமை குறிப்பிடத்தக்கது

#இலங்கை அணி   #தடை  #கட்டுப்பாடு  #இலங்கை கிரிக்கெட் நிறுவனம்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link