டென்மார்க்கில் உள்ள உலகிலேயே 800 ஆண்டுகள் பழமையான மற்றும் பயன்பாட்டில் உள்ள கொடியினை பாதுகாத்து, அந்நாட்டு அரசு கொண்டாடியுள்ளது. டென்மார்க்கின் தலைநகர் கோப்பென்கன்னுக்கு அண்மையிலுள்ள வாடின்போ நகரில் இந்த 800 ஆண்டுகள் பழமையான கொடி உள்ளது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க கொடி உருவாக்கப்பட்டு, 800 ஆண்டுகள் நிறைவடைந்த தினத்தையொட்டி நடத்தப்பட்ட விழா அரசு முறைப்படி நடத்தப்பட்டதுடன் இந்த நிகழ்ச்சியில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கலந்துக் கொண்டுள்ளனர்.
அப்பகுதியில் உள்ள மிக உயரிய கம்பத்தில் இக்கொடி ஏற்றப்பட்டதுடன் டென்மார்க்கின் வரலாற்றினை பிரதிபலிக்கும் வகையில் அப்பகுதியில் கண்காட்சி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியை டென்மார்க்கின் இளவரசர் பெட்ரிக் மற்றும் அவரது மனைவி இளவரசி மேரி ஆகியோர் பார்வையிட்டதும் குறிப்பிடத்தக்கது.
#உலகிலேயே #பழமையான #கொடி #டென்மார்க் ,