Home இந்தியாதிருமங்கலம் அருகே வெற்றுக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம்

திருமங்கலம் அருகே வெற்றுக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம்

by admin


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வெற்றுக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள குருவாயூரில் இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.  இந்த கிராம மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்பதுடன் ஆழ்குழாய் கிணறுகளிலும் போதுமான நீர் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

3 கி.மீ. தூரத்தில் உள்ள கிராமம் ஒன்றுக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகின்ற நிலையில் குடிநீர் வழங்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. இதனால் ஆத்திரமடைந்த குருவாயூர் கிராமத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று கள்ளிக்குடி-காரியாபட்டி சாலையில் வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் ; அந்த வழியாக வந்த பேருந்தொன்றையும் சிறைபிடித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் குடிநீர் வினியோகிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

#திருமங்கலம்  #வெற்றுக் குடங்களுடன் #பெண்கள்  #சாலை மறியல் போராட்டம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More