Home உலகம் கனடாவில் பிரதமர் பங்கேற்ற நிகழ்வில் துப்பாக்கிச் சூடு -4 பேர் காயம்

கனடாவில் பிரதமர் பங்கேற்ற நிகழ்வில் துப்பாக்கிச் சூடு -4 பேர் காயம்

by admin


கனடாவில் டொரொன்டோ ரேப்டர்ஸ் அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கியால் சூட்டில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.  கனடாவில் அண்மையில் நடந்து முடிந்த தேசிய கூடைபந்து போட்டியில் டொரொன்டோ ரேப்டர்ஸ்  அணி வெற்றி பெற்று, சம்பியன் பட்டம் பெற்றிருந்தது. அதனையடுத்து அந்த அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி டொரொன்டோவின் நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் ; பங்கேற்றிருந்ததுடன் சதுக்கத்துக்கு வெளியே உள்ள வீதிகளில் சுமார் 10 லட்சம் பேர் ஒன்று கூடி தங்கள் நகரைச் சேர்ந்த அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடிக் கொண்டிருந்த வேளை இவ்வாறு துப்பாக்கியால் சூடு மேற்கெனாள்ளப்பட்டுள்ளது

இதில் 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில்p அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய 3 பேரை கைது செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

#கனடா #பிரதமர்  #துப்பாக்கிச் சூடு  #டொரொன்டோ ரேப்டர்ஸ்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More