கல்முனையில் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ராஜனும் தனது போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்.
இந்நிலையில் கல்முனையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் தமது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.
அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக இப்போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுமென ஞானசார தேரர் வழங்கிய உறுதிமொழியை அடுத்து நால்வர் தமது போராட்டத்தை நிறைவு ஏற்கனவே செய்தனர். எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ராஜன் நீரை மட்டும் அருந்தி தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்பொது அனைவரும் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளனர். #கல்முனை #உண்ணாவிரதப்போராட்டம், #ஞானசார தேரர்
படங்கள் -Farook Sihan