Home இலங்கைபோரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு கொடுப்பனவு..

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு கொடுப்பனவு..

by admin

போரினால் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களிற்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வ இன்று காலை 10.30 மியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள மக்கள் நலன் காப்பகத்தில் இடம்பெற்றது. குறித் நிகழ்வில் முன்னால் வடமாகாண முதல்வர் சி வி விக்னேஸ்வரன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உதவிகளை வழங்கி வைத்தார். இதன்போது யுத்தத்தில் உயிரிழந்த மாவீரர்களின் பெற்றோர் 30 பேருக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டதுடன், உலர் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்துகொண்ட முன்னால் முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் நிகழ்வில் கரு்தது தெரிவித்தார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இவ்வாறான குடும்பங்களிற்கு மக்கள் நலன் காப்பகம் மற்றும் புலம்பெயர் உறவுகள் பலரும் உதவ முன்வந்துள்ளமையை அவர் பாராட்டினார். இதேவேளை யுத்தத்தினால் சிதை்கப்பட்ட ஏழைகளின் வீடுகள் உள்ளிட்டவற்றை சீர்செய்து கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தினார். இதேவேளை கல்முனை சம்பவம் தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்தார்.

கல்முனையில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு தமது முழு ஆதரவினை வழங்கிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். #சிவிவிக்னேஸ்வரன் #புலம்பெயர்உறவுகள் #உலர்உணவுப்பொதி #மக்கள்நலன்காப்பகம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More