Home சினிமாவிஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக  மேகா ஆகாஷ்   

விஜய் சேதுபதி படத்தில் அமலாபாலுக்குப் பதிலாக  மேகா ஆகாஷ்   

by admin


விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமான அமலாபால், தற்போது அப்படத்தில் இருந்து விலகியுள்ளதுடன் புதிய நாயகியாக  மேகா ஆகாஷ்  ஒப்பந்தமாகியுள்ளார்.   இயக்குநர்  எஸ்.பி.ஜனநாதனிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகநாத்தின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதிக்கு கதாநாயகியாக நடிக்க அமலா பால் ஒப்பந்தமாகி இருந்தார்.

விஜய் சேதுபதியின் 33ஆவது படமான இப்படத்திற்கு இன்னும் தலைப்பிடப் படவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் பழனியில் தொடங்கி இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் வேறு பல திரைப்படங்களில் நடித்து வருகின்றமை காரணமாக அமலா பால், இப்படத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு பதில் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #விஜய் சேதுபதி  #அமலாபால் #மேகா ஆகாஷ் 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More