சினிமா பிரதான செய்திகள்

இளையராஜா இசையில் ஆங்கில பாடல்



இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் ஒரு தமிழ் படத்தில் ஆங்கிலப் பாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.   இளையராஜா லவ் அண்ட் லவ் ஒன்லி என்ற அவுஸ்ரேலிய திரைப்படத்துக்கு ஏற்கனவே இசையமைத்து உள்ளார். இந்நிலையில் ஒரு தமிழ் படத்துக்காக ஆங்கில பாடலுக்கு இசையமைத்து உள்ளார்.

முன் பதிவு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கே.எம்.துரைபாண்டியன் இயக்கவுள்ளார். இயக்குனர் கௌவுதமனின் மகன் தமிழ், இப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தில் கிராமத்துக்கு செல்லும் கதாநாயகன், கதாநாயகி அங்கு இருக்கும் சிறுவர்களுடன் இணைந்து பாடுவது போல் இந்த ஆங்கில பாடல் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவு மஞ்ச்லால் மேற்கொள்ளுகின்றார். இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றியவர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.    #இசைஞானி  #இளையராஜா #ஆங்கில பாடல்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.