Home சினிமாயோகிபாபு நடித்த கூர்கா திரைப்படம் 12ஆம் திகதி வெளியீடு!

யோகிபாபு நடித்த கூர்கா திரைப்படம் 12ஆம் திகதி வெளியீடு!

by admin


சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு நாயகனாக நடித்துள்ள ‘கூர்கா’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதியை படக்குழு அறிவித்துள்ளது. சாம் ஆண்டன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும்  ‘கூர்கா’ என்ற திரைப்படத்தில் யோகி பாபு நாயகனாகவும் கனடா அழகி எலிஸ்சா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் பலர் நடிக்கும் இந்த திரைப்படம்,  நகைச்சுவை மற்றும் சண்டைஇணைந்த திரைப்படமாக உருவாகி வருகின்றது. அத்துடன் இப் படத்தில் கூர்காவில் நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது  வெளியீட்டுக்குத் தயாராகி உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழு “யு” சான்றிதழ் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  #யோகிபாபு  #கூர்கா #வெளியீடு

 

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More