பெங்களூருவில் நிலவும் கடுமையான தண்ணீர் பிரச்சினை காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக துணை முதலமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நகரமாக விளங்கி வருகின்ற பெங்களூரு அதிவேகமாக வளரும் நகரங்களில் ஒன்றாக விளங்குவதனால் வெளிமாநிலங்களிலிருந்து அதிகமாவர்கள் அங்கு சென்று குடியேறி வருகின்றனர். இதனால் நகரில் குடியிருப்புகளின் தேவை அதிகரித்து வருகிறது. இடப்பற்றாக்குறை காரணமாக தற்போது பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது அதிகரித்து உள்ளதனால் இந்த குடியிருப்புகளுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுப்பது பெங்களூரு மாநகராட்சிக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது.
இந்த பிரச்சினை குறித்து கர்நாடக துணை முதலமைச்சர் பரமேஸ்வரா செய்தியாளர்களுக்கு வழங்கிய செவ்வியலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தண்ணீர் பிரச்சினை உள்ளதால், பெங்களூருவில் 5 ஆண்டுகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டுவதை தடை செய்வது குறித்து அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. இது தொடர்பாக கட்டுமான தொழில் செய்பவர்களின் கூட்டத்தை கூட்டி அவர்களின் கருத்துகளையும் கேட்க உள்ளதாகவும் அதன் பின்னா இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். #தண்ணீர் பிரச்சினை #பெங்களூரு #அடுக்குமாடி #தடை