உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று பகல் 02 மணியளவில் மீண்டும் கூடவுள்ளது. இன்றைய தினம் முதலாவது சாட்சியாளராக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராக உள்ளார். ரிஷாத் பதியுதீன் கடந்த 26ம் திகதி சாட்சியம் வழங்குவதற்காக தெரிவுக்குழு முன்னிலையில் முன்னிலையான போதிலும் அவரிடம் விசாரணை நடத்தாமல் ஒத்தி வைப்பதாக தெரிவுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர். அதன்படி இன்றைய தினம் 02 மணிக்கு அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர். #உயிர்த்தஞாயிறுதாக்குதல் #ரிஷாத்பதியுதீன்
ரிஷாத் பதியுதீன் சாட்சியம் வழங்குகிறார்…
165
Spread the love
previous post