Home பிரதான செய்திகள்இங்கிலாந்து இந்தியாவினை 31 ஓட்டங்களினால் வென்றுள்ளது.

இங்கிலாந்து இந்தியாவினை 31 ஓட்டங்களினால் வென்றுள்ளது.

by admin


ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 38 ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ஓட்டங்களினால் இந்தியாவினை வென்றுள்ளது.  இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்தும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் நேற்றையதினம் பேர்மிங்காம் மைதானத்தில் போட்டியிட்ட நிலையில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 337 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதனையடுத்து 338 என்னும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 306 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 31 ஓட்டங்களினால் உலககிண்ணத் தொடரில் முதல் தோல்வியை சந்தித்துள்ளது.இதேவேளை இன்றையதினம் இலங்கை அணியும் மேற்கிந்திய தீவுகள் அணியும் போட்டியிழடவுள்ளமை குறிப்பிடத்தக்கது  #இங்கிலாந்து #இந்தியா  #உலகக் கிண்ண

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More